இராணுவச் சிப்பாய் ஒருவர் உலர் கஞ்சாவை கடத்தும் நோக்கில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
ஹம்பகமுவ, தனமல்வில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்போதே 08 கிலோ 05 கிராம் உலர் கஞ்சாவை குறித்த இராணுவச்சிப்பாயிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
அம்பலாந்தோட்டை, மயூரபுர பொறியியல் சேவை படைப்பிரிவை சேர்ந்த 24 வயதுடைய சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.