Breaking Newsஇலங்கைசெய்திகள்
பிற்போடப்பட்டது விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்!!
Answer paper evaluation

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் சில நாட்களுக்கு பிற்போடப்படுவதாக கூறப்படுகின்றது.
ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இவ்விடயம் குறித்து தெரிவிக்கையில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் நிலை குறைவடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் சில நாட்களுக்கு பிற்போகக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்விடயம் குறித்து தெரிவிக்கையில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதுமானதல்ல என்பதால் சில ஆசிரியர்கள் அந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றார்.