வஜிர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு – விரைவில் அமைச்சராகிறார் !
நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேயவர்த்தன சபாநாயகர் முன்னிலையில் இன்று (27) பதவியேற்றுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிடத்திற்கு ஏற்பட்ட தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கே வஜிர நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வெற்றிடத்திற்கே வஜிர இன்று நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், வஜிரவுக்கு விரைவில் அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் மத்தியில் செல்வாக்கு அற்றுப்போயுள்ள ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் மிளிரச்செய்யும் வேலையை ரணில் விக்கிரமிங்க ஆரம்பித்துள்ளதாகவும் தென்னிலங்கை அரசியல் உயர் தகவல்கள் குறிப்பிடுகின்றன.