தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு உடல்நலம் இயாலாது உள்ளமையால் தற்காலச்சூழலில் பதவி விலகி பங்காளிக் கட்சிகளின் தலைமைகள் கூட்டுத்தலைமையை ஏற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு பிரத்தியேக போட்டி வழங்கியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் வினவப்பட்ட முக்கிய வினாக்களும், அதற்கான செல்வம் அடைக்கலநாதனின் வெளிப்படையான பதில்களும் வறுமாறு,
“தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரானா?” என பொதுவாக பலராலும் உச்சரிக்கப்படும் வினா கேட்கப்பட்டது. ஆயினும் அதற்கான பதில் முற்றிலும் வித்தியாசமாக காணப்பட்டது.
“இல்லை சுமந்திரன் த.தே.கூட்டமைப்பின் அடுத்த தலைவர் இல்லை. ஏனெனில் அவர் கட்சிக்குள் புதிதாக வந்தவர். இனிவரும் கூட்டமைப்பின் தலைமை கூட்டுத்தலைமையாகத் தான் இருக்கும். சம்பந்தனோடு தனித்தலைமை இனிமேல் இருக்காது. இனிவரும் காலங்களில் சுழற்சி முறையிலான கூட்டுத்தலைமையாகவே இருக்கும்” என விசித்திரமான பதிலை செல்வம் வழங்கியிருந்தார்.
“கூட்டுத்தலைமை அதாவது சுழற்சி முறையிலான தலைமை என்றால் என்ன?” என்ற விளக்கம் கோரப்பட்டது.
“தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் தற்போது தமிழரசு கட்சி, ரெலோ, புளொட் ஆகிய மூன்று கட்சிகள் அங்கத்துவம் வகிக்கின்றன. அந்த அடிப்படையில் சுழற்சி முறையில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை வருடங்கள் எனப் பிரிக்கப்பட வேண்டும். அந்த வகையில் சுழற்சி முறையிலான தலைமைத்துவம் ஜனநாயக ரீதியில் அமைய வேண்டும். இனிவரும் காலங்களில் த.தே.கூட்டமைப்பின் செயற்பாடு அதனை அடிப்படையாகக் கொண்டே அமையும் என்பதை குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்” என எவரும் எதிர்பார்க்காத பதிலை செல்வம் தெரிவித்தார்.
“சுழற்சி முறையிலான கூட்டுத்தலைமை தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசியிருக்கின்றீர்களா?” என்ற வினாவும் தொடுக்கப்பட்டது.
“இல்லை இதுவரையில் இல்லை. அதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை. சம்பந்தன் ஐயாவின் உடல்நிலை தற்போது இயலாமல் உள்ளது. இந்நிலையில் இவ்விடயம் பற்றி பேசி அவரின் மனதை கஸ்ரப்படுத்த விரும்பவில்லை. சம்பந்தன் ஜயாவால் தற்போது இயலாமால் உள்ளது. ஆகையால் ஐயா கட்சியின் நலனுக்காக பதவி விலக வேண்டும். ஏனென்றால் ஒருவேளை தற்போதைய அரசாங்கம் சர்வகட்சி அரசாங்கமாக அமைந்தால் ஐக்கிய மக்கள் சக்தியும் அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்க வேண்டிவரும். அதனால் எதிர்கட்சித் தலைவர் பதவி த.தே.கூட்டமைப்புக்கே கிடைக்கும். சம்பந்தன் ஐயா வயது முதிர்ந்த நிலையில் உள்ளதால் அவரால் பதவியை ஏற்றுக்கொண்டு செயற்படமுடியாது. எனவே சம்பந்தன் ஐயா தலைமைப் பொறுப்பில் இருந்து விலகி சுழற்சி முறையிலான கூட்டுத்தலைமை அமைய சந்தர்ப்பம் வழங்கவேண்டும். இது பற்றி விரைவில் அவரோடு பேசுவோம்” என்ற தெளிவான விளக்கத்தை செல்வம் அடைக்கலநாதன் வழங்கினார்.
“கூட்டுத்தலைமை என்றால், நீங்கள் அல்லது சித்தார்த்தனா தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்கள்?” என்ற வில்லங்கமான கேள்வியும் தொடுக்கப்பட்டது.
“ஆம். அப்பிடித்தான் இருக்கும். இதுவரை காலமும் சம்பந்தன் ஐயா தமிழரசு கட்சி சார்பில் தலைமைப்பொறுப்பை ஏற்றிருந்தார். எனவே நாங்கள் மூவரும் ஒரு இணக்கப்படாட்டுக்கு வந்து எவ்வித பிரச்சனைகளையும் வரவிடாது தலைமை தாங்கும் வாய்ப்பை ஏற்படுத்துவோம்” என வில்லங்கமாக கேட்கப்பட்ட கேள்விக்கு விள்ளங்கம் இல்லாமால் செல்வம் பதில் அழித்தார்.
இதில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார் என்பதை வாசகர்கள் ஆகிய நீங்கள் ஊகித்துக்கொள்ளுங்கள்.
-தமிழன்-