ஆசிரியர் இடமாற்றத்தினை பெற்றுத்தருமாறு கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் புல்மோட்டை மத்திய கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பல பாடசாலைகளில் இவ்வாறான பிரச்சினை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
“இடமாற்றம் செய்ய அதிகாரம் வழங்கியது யார்,” “கணித பாட ஆசிரியர்களைப் பெற்றுத்தா”, “கணித விஞ்ஞான பிரிவுகளைத் திட்டமிட்டு அழிக்காதே” மற்றும் “ஆசிரியர்களை விரைவில் பெற்றுத்தா” போன்ற சுலோகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்ததுடன் ஐந்நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.