
அண்மையில் திருட்டுச் சம்பவவம் ஒன்று யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றதை அடுத்து, வாகனங்களில் வருவோரை தமது அனுமதி இல்லாமல் உள்ளே அனுமதிக்ககூடாது என உயர் அதிகாரிகள் பணித்ததால் கிளினிக்கிற்கு வந்த கர்ப்பவதிகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் கிளினிக்கிற்காக வந்திருந்த கர்ப்பவதி பெண்கள் சிலர் வாசலிலேயே தடுக்கப்பட்டுள்ளனர்.
இதனால் காவலாளிக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் மூண்டதுடன், காவலாளியைத் தாக்கவும் முயன்றுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.