உலகம்செய்திகள்

கின்னஸ் சாதனை – 19 வயதில் உலகை தனியாகச் சுற்றிவந்த பைலட் சிறுமி!!

Guinness World Record

19 வயது பைலட் சிறுமி ஒருவர் உலகம் முழுவதும் தனியாக அதுவும் சிறியரக விமானத்தில் சுற்றிவந்துள்ளார். இதனால் 2 கின்னஸ் சாதனைகளை அவர் முறியடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியம் மற்றும் பிரிட்டன் என்று இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் 19 வயது பெண்மணி ஜாரா ஜேர்ஃபோர்ட். இவருக்கு விமானம், தொழில், அறிவியல் என்று ஆண்கள் வசமே இருக்கும் ஏதேனும் ஒரு துறைகளில் சாதிக்க வேண்டும் என்று ஆசை. கூடவே ஊர்ச்சுற்றும் சாகசம் என்றால் இவருக்கு அலாதி பிரியம். இதற்காக மைக்ரோலைட் சிறிய ரகவிமானத்தில் உலகத்தைச் சுற்றிவர முடிவெடுத்துள்ளார்.

கொரோனா நேரத்தில் விசா, வானிலை போன்ற சில மோசனமான அனுபவங்களில் சிக்கிய அவர் அலாஸ்கா, ரஷ்யா போன்ற இடங்களில் கிட்டத்தட்ட 1 மாதம் தங்க வேண்டிய மோசமான சூழலையும் சந்தித்து இருக்கிறார். சீனாவில் பறப்பதற்கே அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பல சிக்கல்களைச் சந்தித்த இந்த இளம் விமானி ஒருவழியாக சைபீரியாவின் பனி உறைந்த டன்டாராவின் மேலும் பிலிப்பைன்ஸ் சூறாவளி மற்றும் அரேபியாவின் பாலைவனம் என உலகம் முழுவதும் 41 நாடுகளை சுற்றிவிட்டு 155 நாட்களுக்குப் பிறகு பெல்ஜியத்தில் தரையிறங்கி இருக்கிறார்.

இவரைப் பார்த்து வியந்த பலரும் தற்போது ஜாரா ஜேர்ஃபோர்ட்க்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவர் பயணித்த தூரம் 52,000 கிலோ மீட்டர், அதாவது 32,300 மைல்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவ்வளவு தூரம் தனியாக அதுவும் சிறியரக விமானத்தில் பயணித்த இவரது திறமையை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.

மேலும் தனது புது பயணத்தின் மூலம் ஜாரா 2 கின்னஸ் சாதனைகளை முறியடித்து இருக்கிறார். கடந்த 2017 இல் அமெரிக்காவை சேர்ந்த வேஸ்டா வைஸ் 30 வயதில் உலகைச் சுற்றிவந்துள்ளார். இந்தச் சாதனையை முறியடித்த ஜாரா ஆகஸ்ட் 18, 2021இல் தனது தனிமையான பயணத்தை ஆரம்பித்து தற்போது 155 நாட்களில் நிறைவு செய்திருக்கிறர்.

இப்படி 2 சாதனைகளை முறியடித்து புது சாதனை பெண்மணியாக உருவெடுத்து இருக்கும் இவர் 14 வயதில் இருந்தே விமானம் ஓட்டிவருகிறாராம். மேலும் விமானம் ஓட்டும் பெண்கள் இந்த உலகில் 5% மட்டுமே உரிமம் பெற்றிருக்கிறார் என்று குறைபட்டு கொள்கிறார் இந்தச் சாதனை சிறுமி.

Related Articles

Leave a Reply

Back to top button