௮ப்பாவின் பார்வையில்
௮ம்மாவானேன்,
௮ம்மாவின் பார்வையில்
சகோதரியானேன்,
காமத்தின் நடுவில்
இறையானேன்.
௧ல்லறையே இல்லறமானது
என்னறை மண்ணானது
௧திகாலத்து மானிடர்களால்.
நடை பழக
கை பிடித்து
நடந்த கரங்கள்
தரையில் கிடக்க ,
முத்தங்கள் வாங்கிய
கன்னங்கள் இரத்தத்தில்
மிதக்க , எமனோ
என்னை ௮ழைக்க
இது தெரியாமல்
என்னை சிதைப்பது
ஏனோ!
வலிகளுடான ௨டல்
என்பதால் கதறியழுதேன்
நான் எமனிடம்
சென்றடைந்தை மறந்து.
வலிகளைத் தந்து
போகாதீர்கள் வழிகள்
எதுவும் இல்லை
விழிகளில் வ௫ம்
கண்ணீர்ரைத் தவிர.
கதி காலம்
என்பதால் கதற
வைத்துப் பார்க்காதீர்கள்
நான் ஊமையானவள்
என்பதை மறந்து
வாழ்கிறேன்.
வேதனைகள் நடுவில்
விளையாடித் திரிந்தவள்
என்பதால் சோதனைகளை
தந்து போகின்றீர்கள்
இறைவனிடம் வாழ்வினை
ஒப்படைத்தவாறு….
மறந்து விடாதீர்கள்
மாய்ந்து விட
முன்பு கொஞ்சமாவது
ஏந்தி விடுங்கள்
இ௫ கரம்
தூக்கி இறைவனிடம்
மன்னிப்பினை வாங்க.
Leave a Reply