இலங்கைவிளையாட்டு

பாகிஸ்தானை பந்தாடியது இலங்கை அணி

ஆசிய கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சுபர் 4 சுற்றின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி ஐந்து இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 121 ஓட்டங்களப் பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்டம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. அதிரடியாக ஆடிய மொஹமட் ரிஸ்வான் 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அத்துடன், பாபர் அஷாம் 30 ஓட்டங்களையும், மொஹமட் நவாஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க 21 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளை சாய்த்தார். மஹீஷ் தீக்ஷன மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினார். தனன்ஜய டி சில்வா ஒரு இலக்கினை வீழ்த்தினார்.

122 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டம் பிரகாசிக்கவில்லை. இரண்டு ஓட்டங்களுக்குள் குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோரின் இலக்குகள் வீழ்த்தப்பட்டன.
தனன்ஜய டி சில்வா 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெறியேறினார்.

அதனடிப்படையில், போட்டியின் இறுதியில் இலங்கை அணி 17 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து அபார வெற்றியை பதிவு செய்தது.

அதிரடியாக ஆடிய பெதும் நிஸ்ஸங்க 48 பந்துகளில் 55 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். பானுக ராஜபக்ஷ 24 ஓட்டங்களையும், தசுன் ஷானக 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் மற்றும் மொஹமட் ஹஸ்னைன் ஆகியோர் தலா 2 இலக்குகளை கைப்பற்றினர்.

Related Articles

Leave a Reply

Back to top button