
நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் கோரிக்கை முன்வைக்கப்பட்டமையைத் தொடர்ந்து நாளைய தினம் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட ஆளுநர் வேதநாயகன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.