இலங்கைசெய்திகள்

பருத்தித்துறை – முனை பகுதியில் சிரமதானம் மேற்கொண்டவர்களை அச்சுறுத்திய இராணுவம்!!

pointpedro

கடந்த வருடங்களில் மாவீரா் தின நினைவேந்தல் நடைபெற்ற யாழ்இ பருத்தித்துறை முனைப்பகுதியில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினா் மற்றும் புலனாய்வாளா்கள் குவிக்கப்பட்டிருந்தனா். படையினர் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தவா்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியதுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்துள்ளனா்.

சிரமதானம் முடிந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளா்கள் தத்தமது வாகனங்களில் திரும்பிய வேளை மோட்டாா்சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் படையினா் மற்றும் புலனாய்வாளா்கள் பின்தொடா்ந்து சென்றும் அச்சுறுத்தியுள்ளனா்.

இச்சிரமதானத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினா் செல்வராசா கஜேந்திரன்இ சட்டத்தரணி காண்டிபன் மற்றும் செயற்பாட்டாளா்கள் கலந்துகொண்டனா்.

Related Articles

Leave a Reply

Back to top button