செய்திகள்புலச்செய்திகள்

தென்மராட்சி மண்ணின் சமூகசேவகி மரணம்- சோகத்தில் உறவுகள்!!

வேலம்பிராயைச் சொந்த இடமாகக் கொண்ட தற்போது சுவிஸ் – சூரிச்சில் வசித்து வந்த குயிந்தன் – ரிஷா என்னும் இளம் குடும்பெண்ணொருவர் 28 .11.2021 இன்று பிரசவத்தின் போது மரணமடைந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது சொந்த மண்ணுக்கு மட்டுமல்லாது புகுந்த இடமான கைதடியிலும் தனது கணவருடன் இணைந்து ‘உதவும் கரங்கள்’ என்னும் அமைப்பினூடாக பல்வேறுபட்ட உதவிகளையும் நலத்திட்டங்களையும் முன்னெடுத்த சிறந்த சமூகசேவகியான இவரது மரணம் இவ்வூர் மக்களின் மனங்களில் துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது குழந்தைக்கான பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவரது மரணம் நிகழ்ந்துள்ளதெனினும் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது. இலங்கை போன்ற நாடுகளிலேயே இவ்வாறான மரணங்கள் குறைந்துள்ள நிலையில் வைத்தியவசதி நிறைந்த சுவிஸ் நாட்டில் இவரது மரணம் நிகழ்ந்துள்ளமை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாக சமூகசேவகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button