இலங்கைசெய்திகள்

காணி அளவீடும் பணிகள் நிறுத்தம்!

maathakal

யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் நேற்று(புதன்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்தது.

காணிகளை அளவீடு செய்வதற்காக நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகை தந்தபோது, காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து, காணி அளவீட்டுப்பணிக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button