காசாவை உலுக்கும் பட்டினி – பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
Gasha

காஸாவில் உணவு மற்றும் சுகாதாரமான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. காஸாவுக்கு நட்பு நாடுகள் கொடுக்கும் மனிதாபிமான உதவிகளை எல்லைப் பகுதிகளிலேயே இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருகிறது.
உணவு, குடிநீர் மற்றும் மருத்து பொருட்கள் என்பன செல்ல முடியாத துயரம் ஏற்பட்டுள்ளது.
காஸாவில் ஏற்பட்டுள்ள இந்த துயரத்தினால், குடிமக்கள் மட்டுமின்றி அங்கு பணிபுரியும் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், காஸாவில் பணிபுரிந்துவரும் புகைப்பட பத்திரிகையாளர் முகம்மது அபு வோன் லிங்க்டு சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள விடயம் பெரும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அவர், உணவுக்காக தனது புகைப்படக் கருவியையும், பாதுகாப்பு உபகரணத்தையும் விற்பனை செய்ய உள்ளதாக அறிவிப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் காஸாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர். நான் எனது உபகரணங்களையும் பாதுகாப்பு கவசத்தையும் வழங்க விரும்புகிறேன். அதன்மூலம் எனக்கும் எனது குடும்பத்துக்குமான உணவை என்னால் வாங்க முடியும் எனப் பதிவிட்டுள்ளார்.
இது உலக பத்திரிகையாளர் மனங்களை ஏதோ ஒரு வகையில் உலுக்கி இருக்கும் என்பது நிச்சயம்.