இன்றைய (30.07 2024 – செவ்வாய்க்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகளின் சுருக்கம் ஒரே பார்வையில்!!
News
1.
இலங்கை அரசாங்ஙத்தின் மீது மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றச்சாட்டு முன்வைப்பு!!
இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை பௌத்தமயமாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2.
முல்லைத்தீவில் குடும்பப்பெண் சடலமாக மீட்பு!!
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் நகர்ப்பகுதியில் கணவர் புலம்பெயர் நாட்டில் வசிக்கும் நிலையில் மாமனார் மாமியாருடன் வாழ்ந்து வந்த இளம் குடும்பபெண் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவருக்கு 5 வயதில் மகள் ஒருவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
3.
திருகோணமலையில் சுற்றுலா பயணிகள் மீது வழிகாட்டிகள் மேற்கொண்ட தாக்குதல்!!
திருகோணமலை புறா தீவில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தி அதிக பணத்தை வசூலித்த ஒரு குழுவினர் தொடர்பில் தகவலைகளை சமூக ஊடகம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
4.
சம்பிரதாய அரசியலால் மீண்டும் போர் வெடிக்கும் அபாயம்!!
எதிர்வரும் தேர்தலில் சம்பிரதாய அரசியலைப் பின்பற்றினால் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்படும் எனவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அதற்கான பொறுப்பில்லை ஏற்கவேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் விர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
5.
நாமல் ராசபக்ச மீது முறைப்பாடு!!
பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மீது அமைச்சர் பந்துல குணவர்த்தன பொலிசில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
6.
பொலிஸ் அதிகாரி போன்று நடித்து பெண்களை மோசடி செய்த முன்னாள் இராணுவ வீரர் கைது!!
இலங்கையில் பொலிஸ் உத்தியோகத்தர் போல் நடகமாடி பெண்களை அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து, தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் அதற்கு உதவி செய்த ஒருவரை கெஸ்பேவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர் – சமர்க்கனி