இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

1.

இருபது இலட்சம் வாக்குகளால் வெற்றி பெறுவேன் – சஜித் உறுதி!! 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இருபது இலட்சம் வாக்குகளால் வெற்றி பெறுவது உறுதி என சஜித் பிரேமதாச உறுதியாகத் தெரிவித்துள்ளார். 

2.

தியாக தீபம் திலீனின் நினைவேந்தலுக்கு தடை கோரிய பொலிசார்!!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாக தீபம் நிலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தேவதற்குத் தடை கோரி,  பொலிசாரினால் யாழ். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டு சில நிபந்தனைகளுடன் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

3.

சங்குச் சின்னத்திற்கு மாத்திரமே வாக்களியுங்கள் – அரியநேந்திரன் தெரிவிப்பு!! 

தமிழ் பொது வேட்பாளர் பற்றிய தவறான கருத்துகளைச் சிலர் பரப்ப முன்வருகின்றனர்.  அவற்றைச் செவிமடுக்காது சங்குச் சின்னத்திற்கு மட்டுமே வாக்களியுங்கள் என தமிழ் பொதுவேட்பாளர் பா.  அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். 

4.

வாக்களித்தவுடன் வீடுகளுக்குச் செல்லுங்கள்!!

எதிர்வரும் 21ம் திகதி அரச தேர்தல் இடம்பெறவுள்ள.நிலையில், வாக்களிப்பு முடிந்தவுடன் மக்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறும் வாக்களிப்பு நிலையங்களுக்கு  அருகில் நிற்க வேண்டாம் எனவும் தேவையற்று,  தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் அலுவலகம்  தெரிவித்துள்ளது. 

5.

இலங்கைக்கு இனி மீட்சி!! 

இன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுகள் இடம்பெறவுள்ள நிலையில் இன்றுடன் இலங்கையின் வங்குரோத்து நிலைமை முடிவடைகிறது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button