இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (29.07.2024- திங்கட்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

17  வயதிற்குள் பாடசாலைக் கல்வி நிறைவு!! 

17வயதுடன் பாடசாலைக்கல்வி நிறைவுறும் வகையில் தரம் 12 வரையான கல்விச் சீர்திருத்தத்தை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2.

பண்ணையில் இளைஞர் குழுக்கள் கைது!! 

யாழ். நகரின் பண்ணைப் பகுதியில் றேஸ் ஓடிய,  மதுபோதையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

3.

கட்சியின் தீர்மானமே எனது முடிவு!! 

எங்கள் கட்சி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கச் சொன்னால் ஆதரிப்போம்.  அல்லது அவருக்கு எதிராக வேறு யாரையாவது நிறுத்தினால் அதற்கும் சம்மதிப்பேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

4.

சாதனை படைத்த இலங்கை மகளிர் அணி!!

2024 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.

5.

தமிழ் பொது வேட்பாளருக்கான தீர்மானங்கள்!!

தமிழ் பொதுவேட்பாளருக்கான தெரிவு மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு  உப குழுக்களை நிறுவியுள்ளது. 

6.

உரிமம் பெறாமல் கைத்தொலைபேசி விற்றால் அபாராதம்!!

உரிமம் பெறாமல் கைத்தொலைபேசிகளை விற்றால் ரூ. 10 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

7.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!!

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 290 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button