வவுனியா மாவட்டத்தில் 58 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கையானது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விஸ்ணுதாசன் தெரிவித்தார்.
பெரும்போக நெற்செய்கை தொடர்பாக கேட்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
பெரும்போக நெற்செய்கைக்கான செயற்பாடுகள் வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் 58 ஆயிரம் ஏக்கரில் இம்முறை பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது வரை 60 வீதமான வயல் நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மிகுதி வயல் நிலங்களில் நெற்செய்கையினை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை 500 மெற்றிக் தொன் பசளையினை முதற்கட்டமாக விவசாயிகளிற்கு வழங்கும் செயற்பாடுகளினை கமநலசேவை நிலையங்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.