1950 ஆம் ஆண்டு, ஹார்வர்டில் டாக்டர். கர்ட் ரிக்டர் என்ற விஞ்ஞானி, தண்ணீர், வாளிகள் மற்றும் எலிகளைப் பயன்படுத்தி தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டார், இதன் விளைவாக அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்பு ஏற்பட்டது.
சோதனை ஒன்று:டாக்டர் ரிக்டர் பெரிய வாளிகளில், பாதி தண்ணீரை நிரப்பி அதில் எலிகளை விட்டு எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கிறது என்று பார்த்தார்.எலி ஓரளவிற்கு நீச்சல் அடித்து இருந்தாலும், சராசரியாக எலி 15 நிமிடங்களுக்குப் பிறகு சோர்வடைந்து நீரில் மூழ்கிவிடுகிறது..
சோதனை இரண்டு: ஆனால் சோதனை 2 இல், அவர் வித்தியாசமான ஒன்றைச் செய்தார்.. சோர்வு காரணமாக எலிகள் கைவிடுவதற்கு சற்று முன்பு, ஆராய்ச்சியாளர்கள் அவற்றை வெளியே இழுத்து, உலர்த்தி, சில நிமிடங்கள் ஓய்வெடுக்க விடுவார்கள்.
பின்னர் அவற்றை மீண்டும் இரண்டாவது சுற்றுக்கு தண்ணீரில் விட்டனர் .. இந்த இரண்டாவது முயற்சியில் – எலிகள் எவ்வளவு காலம் நீடித்தன என்று நினைக்கிறீர்கள்?
இன்னும் 15 நிமிடங்கள்?
10 நிமிடங்கள்?
5 நிமிடம்?
60 மணி நேரம்!
ஆமாம்!! 60 மணி நேரம் நீச்சல்… எலிகள் இறுதியில் நம்மை மீட்டுவிடுவார்கள் என்று நம்பியதால், அவை மரணத்தைத் தள்ளி போட தங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அவுன்ஸ் ஆற்றலையும் பயன்படுத்தின. “நம்பிக்கை என்பது வாழ்வில் இருள் சூழ்ந்திருந்தாலும் ஒளியைக் காண்பது போன்றது ஆகும்..
நம்பிக்கை ஒன்றே விரக்தியடைந்த எலிகளையே 60 மணிநேரம் நீந்தச் செய்திருக்கிறது என்றால்,
உங்கள் திறன்கள் மற்றும் உங்களைப் பற்றிய நம்பிக்கை உங்களுக்கு என்ன செய்ய முடியும்?
என்று சிந்தித்து இந்த தைப் பொங்கlலில் நேர்மையை கையில் ஏந்தி பயணித்தால், இந்த வானம் உன் வசப்படும்…
கி. முத்துராமலிங்கம்