இலங்கைசெய்திகள்

சுனாமி பேபி அவரது இல்லத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தினார்!!

sunami baby

சுனாமி தாக்கத்தினால் கிழக்கு மாகாணமே மிகவும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2004.12.26 அன்று சுனாமியால் காணாமல்போய் பின்னர் வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தை ஒன்றுக்கு அப்போது 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர். அபிலா; அப்போதிருந்து சுனாமி பேபி என்றே அழைக்கப்பட்டு வரப்படுகின்றது. பின்னர் மரபணுப்பணு பரிசோதனை மூலம் மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த ஜெயராசா தம்பதியினரது என உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் அக்குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த அபிலாஷிக்கு 17 வயது. அபிலாஷ் தனது இல்லத்தில் வைத்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான தூபியில் இன்று பெற்றோர் உறவினர்களுடன் இணைந்து சுடர் ஏற்றி மலரஞ்சலி செலு த்தினார்.

சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்கும் தாம் இந்த நேரத்தில் அஞ்சலி செலுத்துவதாக அபிலாஷ் தெரிவித்தார்.

இதன்போது அவரது இல்லத்திற்கு வருகை தந்திருந்த வடகிழக்கு ஒப்பனையாளர் சங்கத்தினால் சுனாமி பேபி அபிலாஷின் கல்விச் செலவுக்காக ஒருதொகை நிதியுதவியும் வழக்கி வைத்தனர்.

செய்தியாளர் – வ.சக்திவேல்

Related Articles

Leave a Reply

Back to top button