உலகம்செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு – கசகஸ்தானில் போராட்டம்!!

Struggle in Kazakhstan

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கசகஸ்தானில் போராட்டம் நடந்துவரும் நிலையில், அல்மாட்டி நகரம், மங்கிஸ்டாவ் மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கசகஸ்தானில் மகிழுந்துகளுக்கு பெரும்பாலும் திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கசகஸ்தான் அரசு, எரிபொருள்மீதான விலையை அண்மையில் உயர்த்தியது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் வெடித்தது.

இதையடுத்து, கசகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டி, மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

அல்மாட்டி நகரில் மேயரின் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அவர்களை விரட்டியடிக்க காவல்துறையிர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் இரு தரப்புக்கும் இடையில் பயங்கர மோதல் வெடித்தது.

அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தால், அந்நாட்டின் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் அல்மாட்டி நகரிலும், மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்திலும் 2 வார காலத்துக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுத்தினார்.

அத்துடன், திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயு மீதான விலையை குறைப்பதாக அறிவித்தாலும், போராட்டமும், வன்முறையும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், தொடர் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக காவல்துறையினர் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கசகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் தலைமையிலான அரசு நேற்று முன்தினம்(06) இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button