இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பிரதமருடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பேச்சை ஆரம்பித்துள்ளனர்!!
srilanka

இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளது. அதன் பிரதிநிதிகள் 10 பேருடன் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், ஒருவாரம் நாட்டில் தங்கியிருந்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.
முன்னதாக இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல், இணையவழியில் இடம்பெற்றிருந்ததுடன்,
இலங்கை அதிகாரிகள் குழுவினர், அமெரிக்காவுக்குச் சென்று, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.