இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீட்டை “CCC இலிருந்து CC ஆகக் குறைத்துள்ளது Standard and Poor’s உலகளாவிய பொருளாதார தரப்படுத்தல் நிறுவனம், இலங்கை கடனைத் திருப்பி செலுத்தும் காலத்தை நீடித்தமையினாலேயே இந்த தரக் குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வெளி நிதி அழுத்தங்களை காரணம் காட்டி இந்த தர மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை சிக்கலானதாக முடிவடைய பல மாதங்கள் ஆகலாம் என்றும் தரமதிப்பீட்டு நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதேவேளை பிட்ச் தர மதிப்பீடும் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய தரத்தை C தரத்துக்கு குறைத்துள்ளது.