இலங்கைசெய்திகள்

‘மொட்டு’ அரசின் பின்வரிசை உறுப்பினர்களுக்குள் பிளவு!!

srilanka

‘மொட்டு’ அரசின் பின்வரிசை உறுப்பினர்களுக்குள் பிளவு? ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் பின்வரிசை உறுப்பினர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல பின்வரிசை உறுப்பினர்கள் அனுமதியின்றி தனித்தனியாக ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தியதால் பிளவு ஏற்பட்டுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அரசின் உயர் அதிகாரி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த வாரமும் அதற்கு முதல் வாரமும் பலர் தனித்தனியாக ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.

இதேவேளை, புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் சுசில் பிரேமஜயந்தவை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதாக பின்வரிசை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்த கருத்துக்குப் பின்வரிசை உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button