கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

ஐவின்ஸ் தமிழ் முன்னெடுக்கும் தரம் 5 மாணவர்களுக்கான அமரர் வே.அன்பழகன் ஞாபகார்த்த இலவச கருத்தரங்கு!!

Seminar

எதிர்வரும் ஒக்ரோபர் 15ம் திகதி பரீட்சைக்குத் தோற்றவுள்ள  தரம் 5 மாணவர்கள் முழுமையான புள்ளிகளைப் பெறுவதற்கான  மாதிரி வினாத்தாள் வெளியீடும்  இலவச கருத்தரங்கும் zoom ஊடாக  இடம்பெறவுள்ளது. 

தென்மராட்சி, மட்டுவிலைச் சேர்ந்த பிரபல புலமைப்பரிசில் ஆசிரியர் புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் ( யாழ். அன்பொளி கல்வி நிலையத்தின் நிறுவுநர்) ஞா பகார்த்த கருத்தரங்கு 06.09.2023 முதல் ஆரம்பமாகவுள்ளது.

அமரர் ஆசிரியர் வே. அன்பழகன் அவர்கள்,  எங்களால் முன்னெடுக்கப்பட்ட கருத்தரங்குகளில் இணைந்து பல மாணவர்களின் கல்வித்திறனுக்கு ஊக்குவிப்பு தந்தவர். நுட்பமான தனது கற்பித்தல் திறன்களாலும் மாணவர்களுடன் பழகும் நேர்த்தியான அன்பினாலும் அனைவரினதும   உள்ளங்களில் இடம்பிடித்தவர். 

நற்குணங்களின் இருப்பிடமாக இருந்த ஆசிரியர் அன்பழகன் இளம் வயதில் மரணமடைந்தமை ஒரு துர்ப்பாக்கியமான சம்பவம். 

அவருடைய பேச்சும் மூச்சும் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டலாகவே இருந்தது. இதன் காரணமாகவே, எமது இணையதளத்தால் முன்னெடுக்கப்படும் இந்த தரம் 5 மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கினை அமரர் ஆசிரியர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக நாம் முன்னெடுத்து வருகிறோம். 

பிரபல ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் ஆசிரியர் அன்பழகனின் வினாத்தாள்களையும் இணைநது  குறித்த கருத்தரங்கினை முன்னெடுக்கவுள்ளோம். 

  யாழ். முன்னணி ஆசிரியரும்  யாழ். அறுவடை ஆசிரியருமான திரு. சிவ. தீபன், 

யாழ். பிரபல ஆசிரியரும் புலமைஒளி, புலமை ஆரம் ஆசிரியருமான   திரு.கே.ஜெயரமணன்,  

திருமலை மாவட்ட.முன்னணி ஆசிரியரும் யாழ். பார்வை, யாழ். ஆசான் ஆசிரியருமான  திரு. ஆ. ஜெயநேசன், 

புலமைத்தேடல் வெளியீட்டு ஆசிரியர் திரு.சே.நிஷாந்தன், 

அதிபரும் முன்னாள் புலமைச்சுடர் ஆசிரியருமான  திரு. தி. திலிப்குமார்,.

யாழ். பிரபல அன்பொளி கல்வி நிலைய ஆசிரியர் திரு.பி.பத்மநேசன், 

கொழும்பு – மாவட்ட முன்னணி ஆசிரியரும் பம்பலப்பிட்டி  இந்துக்கல்லூரி ஆசிரியருமான  திரு. எஸ்.ஏ.சந்திரபவன்,

 யாழ். முன்னணி ஆசிரியரும் குறிஞ்சி வெளியீட்டு ஆசிரியருமான திரு.சண்.சுதர்சன் ஆகியோரின் கருத்தரங்கு தெளிவுபடுத்தல்களுடன் 

 அமரர். வே. அன்பழகன் அவர்களின் வினாத்தாள் வெளியீடும் நடைபெறவுள்ளது.

மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் வெளியிடப்பட்டதன், பின்னர் அதனை மாணவர்கள் பயிற்சி செய்து எங்களால் தரப்படும் விடைத்தாளுக்கு ஏற்ப பெற்றோரால் திருதம் செய்யப்பட்டு, புள்ளியிடப்படவேண்டும். 

அதில் விளங்காத வினாக்கள் குறித்து எமது வட்ஸ்அப் இலக்கத்திற்கு  குறுந்தகவல் அனுப்பினால், மறுநாள் அதே ஆசிரியரால் விடைகள் தெளிவுபடுத்தப்படும்.  

  எமது வட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் ஏனைய விபரங்களைப் பெற்றுக் கொள்ளமுடியும். 

தொடர்புகளுக்கு :

077 6044212

076 8623472

Related Articles

Leave a Reply

Back to top button