இலங்கைசெய்திகள்

சமூக வலைத்தளங்களிலா பிரகடனம் – ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு!!

Seminar

சமூக வலைத்தளங்கள் தொடர்பான பிரகடனம் குறித்த ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலும் கருத்தரங்கும் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் ஊடக நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் அடங்கலாக 19 அமைப்புக்கள் கையெப்பமிட்டு மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் இரண்டு நாட்கள் கொண்ட வதிவிட கருத்தரங்காக இன்று {சனிக் கிழமை} (19) மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றிலேயே இக்கலந்துரையாடல் ஆரம்பமானது.

பொறுப்புணர்வுடன் கூடிய விதத்தில் சமூக வலைத்தளங்களின் பாவனையை ஊக்குவித்தல் மற்றும் டிஜிட்டல் தகவல் துறை தொடர்பான அறிவினை பயன்படுத்துதல், டிஜிட்டல் உரிமைகள் சமூக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான மனித உரிமைகளுடன் இயற்கையாகவே இணைந்து இருப்பதுடன் பிரிந்து வேறுபடுத்த முடியாத அளவுக்கு அந்த உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு அங்கீகரித்தல் எனும் குறிக்கோளுடன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு இக் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.

இன்றைய முதல்நாள் கருத்தரங்கில் சமூக வலைத்தளங்களைப் பொறுப்புமிக்க விதத்தில் பயன்படுத்துவதற்கான ஒழுக்க நெறிகளை மையமாகக் கொண்டு இதில் ஊடகவியலாளர் மற்றும் ஊடக நிறுவனங்களின் பொறுப்பு, சிவில் அமைப்புக்களின் பொறுப்பு, அரசாங்கத்தின் பொறுப்பு, சமுக வலைத்தளங்களின் பொறுப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் வளவாளர் சம்பத் சமரக்கோன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கங்களை வழங்கினர். இந்நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (20) நிறைவு பெறவுள்ளது. இவ்வாறான கருத்தரங்கு நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button