சமுர்த்திப் பயனாளிகள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 2 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை வழங்குவதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
40,000 மெட்ரிக் டொன் நெல் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் 61,600 மெட்ரிக் டொன் நெல் கொள்வனவு செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலைகளின் உதவியுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களால் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் கீழ், அடையாளம் காணப்பட்ட சமுர்த்தி பயனாளிகள் உட்பட குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு தற்போதுள்ள முறைமையில் அரிசி விநியோகிக்கப்படுவதுடன், மகளிர், சிறுவர் விவகார அமைச்சு, மாவட்ட செயலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.