ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் உணவு பொருட்கள் விலைகள் முந்தைய ஆண்டைவிட 28 சதவீதம் உயர்ந்துள்ளன.
அதன் உணவு விலைக் குறியீடு 2021 இல் சராசரியாக 125.7 ஆக இருந்தது. இது ஒரு தசாப்தத்தில் அதிகபட்ச அளவாகும்.
கடந்த ஆண்டு அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்ந்த அதேவேளை தாவர எண்ணெய் விலை 66 சதவீதமாக உயர்ந்தது. இது எப்போதும் இல்லாத அதிகபட்ச அளவைக் குறிக்கிறது.
தானியங்களின் விலை 27சதவீதமாகவும் மக்காச்சோளம் 44.1 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
உலக உணவு மற்றும் சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கோதுமை விலை 31.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும், இறைச்சி விலை சராசரியாக 12.7 சதவீதமாகவும் பால் பொருட்கள் 16.9 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.