இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கை காவல்துறை குறித்து விசனம் வெளியிட்டுள்ளது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!!
Police

இலங்கை காவல்துறையின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறையில் ஆரம்பமான அமைதிப் பேரணி பாணந்துறையில் மறிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து வினா எழுப்பப்பட்டுள்ளது. பெண் காவலர்களைத் தகாத முறையில் நடத்தியமை தொடர்பிலும் விசாரணை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்
இச்சம்பவங்களால், அண்மைக் காலங்களில் பொலிசாரின் நடவடிக்கைகள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும் , சர்வதேச ரீதியில் இலங்கையின் பெயரில் உள்ள நன்மதிப்பைக் குறைப்பதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.