இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!!
Ordinary grade examinees

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, நாளைய தினம் தங்களது பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள், அருகிலுள்ள பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளைய தினம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகளின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.