இன்றைய பத்திரிகையில் (08.07. 2024) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
News
1.
200க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!!
அரச சேவைத்துறையைச் சேர்ந்த 200க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றும்(திங்கட்கிழமை) நாளையும் (செவ்வாய்க்கிழமையும்) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2.
அரச ஊழியர் வீதம் வீழ்ச்சி!!
2023ம் ஆண்டில் சென்ற ஆண்டைவிட அரச துறையில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2.9சதவீதம் குறைந்துள்ளது என நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.
பொலிஸ் அதிகாரம் இல்லாமல் அதிக அதிகாரப் பரவலாக்கம்!!
13வது திருத்தத்தின் கட்டமைப்பிற்கு ஏற்ப பொலிஸ் அதிகாரம் இல்லாமல் அதிகபட்ச அதிகாரத்தைப் பரவலாக்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
4.
தலைவருக்கும் எனக்கும் ஏற்பட்டது சிறிய பிரச்சினை – கருணா!!
தலைவருக்கும் எனக்கும் இடையே ஏற்பட்டது சிறிய பிரச்சினை தான், எனவும் அதனைச் சிலர் மிகப் பெரிதாகச் சித்தரிக்கின்றனர் எனவும் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
5 .
தென்மராட்சியில் இன்று கதவடைப்பு போராட்டம்!!
“தென்மராட்சி மருத்துவமனையின் மீள் எழுச்சிக்காக ஒன்றிணைவோம்” என்கிற கருப்பொருளில் இன்று தென்மராட்சியில் கதவடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
6.
ஆயுதப் படைகளின் சம்பளம் அரச துறையினரின் மொத்த ஊதியத்திற்கு ஈடாக வழங்கப்படுகிறது!!
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, கடந்த ஆண்டு அரசாங்கம் ஏனைய ஊழியர்களுக்கு வழங்கிய வேதனத்திற்கு ஈடான தொகையை ஆயுதப்படைகளுக்கு மட்டும் சம்பளமாக வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் – சமர்க்கனி