இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!!

New Cabinet

இன்று புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 38 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புதிய அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் முன்னதாக அமைச்சு பதவிகளை வகித்தோரில் பலர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சர்வ கட்சி அரசாங்க வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த நியமனம் அமைவதற்கு பெரும்பாலும் சந்தர்ப்பம் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையில் சர்வகட்சி அரசாங்கத்திற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்த போதிலும், அதில் எவ்வித இறுதி தீர்மானங்களும் எட்டப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Back to top button