ரணில் விக்கிரமசிங்கேவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்த பாராளுமன்றத்தின் தீர்மானத்தை ஆதரிப்பதாக தேசிய கிறிஸ்தவ சபை தெரிவித்துள்ளது.
17 மற்றும் 19 ம் திருத்தங்களில் உள்ள நல்ல விடயங்களை தெரிவு செய்து அமுல்படுத்துவதற்கு வேண்டிய நடவடிக்களை எடுக்க வேண்டும் எனவும் உடனடியாக சர்வ கட்சி அரசாங்கம் அமைத்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டின் அமைதி மற்றும் சுபீட்சத்திற்காக இணைந்து செயல்படவேண்டும் எனவு அந்தச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
உறிப்பிட்ட காலத்திற்குள் பொதுத்தேர்தல் ஒன்றை நடாத்தி தமக்கான தலைவர்களை மக்கள் தெரிவு செய்ய முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.