கோழிப்பண்ணைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மக்காச்சோள அறுவடை குறைவில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெரும் போகத்தில் சுமார் 110,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வருடாந்தம் 250,000 முதல் 280,000 மெட்ரிக் தொன் மக்காச்சோளத்தை அறுவடை செய்தாலும், 2021 பெரும் போகத்தில் 90,000 மெட்ரிக் தொன் மக்காச்சோளத்தையே பெற்றுக்கொண்டது.
இலங்கையின் வருடாந்த தேவை சுமார் 400,000 மெட்ரிக் தொன்னாகும். அதேவேளை மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளிலும் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்தக்கூடிய சுமார் 50,000 மெட்ரிக் தொன் சோள விதைகள் தங்களிடம் இருப்பதாகவும் மேலும் 25,000 மெட்ரிக் தொன் நன்கொடையாக எதிர்பார்க்கப்படுவதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.