பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் கொரோனா பரவல் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
தற்போதைய சுதந்திரமான சூழலைப் பொதுமக்கள் அனுபவிக்கின்ற அதேநேரம், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது மூன்றாம் தடுப்பூசியாக பைஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. அதனைப் பொதுமக்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.