தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளை வாசிப்பதற்கு நேரம் இல்லையென முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ச சுகந்திரக்கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதனால் வெளியேறலாம் எனத் தெரிவித்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாமல் ராஜபக்ச தமது கட்சியை விமர்சனம் செய்தமை தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும், பத்திரிகைகளை வாசிப்பதற்கோ அல்லது தொலைக்காட்சியில் செய்திகளை பார்ப்பதற்கோ நேரம் இருப்பதில்லை.
வேலைகளை முடித்துக் கொண்டு வீடு செல்லும் போது 10, 11 மணி ஆகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.