கிளிநொச்சிக்கு கோரக்கன் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவன சந்திப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கழமை குழி ஒன்றை வெட்டிய போது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், அங்கிருந்த துப்பாக்கி ரவைகள் அடங்கிய இரு பெட்டிகளை மீட்டுள்ளனர்.
இது குறித்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக, அப்பகுதி கிராம சேவகர் கோணாமலை சேகர் முன்னிலையில் இன்று (15) பகல் 9 மணிக்கு மணிமுதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.