300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி வெளியிடப்பட்டது.தற்போது இறக்குமதியைக் கட்டுப்படுத்தி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாசனை திரவியங்கள் உள்ளிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.