கடும் பனிப்பொழிவு காரணமாக பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டு இராணுவத்தினர் சாலைகளை சீரமைத்து, மலை உச்சியில் உள்ள முர்ரி நகருக்கு அருகில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த பனிப் பொழிவில் சுமார் 1,000 வாகனங்கள் சிக்கிக்கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் தெரிவித்தார்.
வழக்கத்திற்கு மாறாக கடுமையான பனிப்பொழிவை பார்வையிடுவதற்காக அண்மைக் காலமாக 100,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் குறித்த நகருக்குள் பிரவேசித்துள்ளன. இதனால் நகரத்திற்குள் செல்லும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த பகுதிக்கு தற்போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மக்களை பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பஞ்சாப் மாகாண முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.