“எமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால் சுகாதார அமைச்சர் தனது அமைச்சுப் பதவியை இழக்க நேரிடும்.”
- இவ்வாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரச்சினை எல்லை மீறுவதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக சுகாதாரத் துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று காலை கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவுக்கு அருகில் இந்த எதிர்ப்பு வாகனப் பேரணி ஆரம்பமானது.