எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன வெளியிட்ட தகவல்!!
Fuel
ஜுன் – ஜுலை மாதங்களில் மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தை ஆரம்பிக்கவுள்ளன.
இந்த நிறுவனங்களுக்காக தற்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இருக்கின்ற 450 எரிபொருள் நிலையங்கள், ஒதுக்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களை அமைச்சர் கஞ்சன விஜயசேகர சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களை கைமாற்றுவதால் ஏற்படுகின்ற நன்மைகள் மற்றும் வரப்பிரசாதங்கள் குறித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு விளக்கமளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைனட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பார்க் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதால், எரிபொருள் விலை மேலும் குறைவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.