கவிதைமுத்தமிழ் அரங்கம்.

புதுக்குறள்கள் _ பெற்றோல்!!

Fuel

திரு வள்ளுவர் இப்ப இவ்வைகையில் இருந்தால் -கற்பனைக் கடி
அதிகாரம் :- பெற்றோலுடைமை
குறள் :- 1331 – 1340

பெற்றோர் எல்லாம் பெற்றோர் அல்லர், தன் பிள்ளைக்கு பெற்றோல் கொடுப்பவரே பெற்றோராவார்.

ஈடில்லார், இணையில்லார் யாரென்றால் பெற்றோல் Shed க்கு பக்கத்தில் வீடுள்ளார்.

கற்றாலும் பயனில்லை இவ்வையத்துள் உனக்கென சிறிது பெற்றோல் இல்லையெனின்.

கற்றார்க்கு கற்ற இடத்திலே சிறப்பு பெற்றோல் பெற்றோர்க்கே செல்லும் இடமெல்லாம் சிறப்பு.

Shed owner ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் கிடைக்குமாம் பெற்றோல்.

கற்றவர், உற்றவர் யாரெனினும் டோக்கன் பெற்ற பின் நிற்க அதற்குத்தக

படியென்பார் படியென்பார், படித்தவர் அரச உத்தியோகத்தர் என்றால் அடியென்பார்.

கற்றதனால் ஆன பயனென்ன பெற்றோல் பெற்றதனால் பெற்ற பயன் முன்னே.

டவுசரை தினமும் கழுவிடு , வீதியில் பெற்றோல் பவுசரை கண்டால் வழிவிடு.

யாகாவராயினும் லைனில் வருக, இடையில் ஏன் வருவான் பைக்கை சொருக.

Related Articles

Leave a Reply

Back to top button