இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணம் தொடர்பில் புதிய நடைமுறை!!
electricity bill

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அச்சு மின் கட்டண சீட்டுக்கு பதிலாக தொலைபேசி குறுஞ் செய்தி மூலம் மின் கட்டணம் பற்றிய அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் கணனி கட்டமைப்பு தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் முதல் மின் கட்டணம் தொடர்பான அறிவிப்பு தொலைபேசிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த செயற்பாடுகள் நகர பிரதேசங்களை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.