இலங்கைசெய்திகள்

“பசுக்களை பாதுகாப்போம்” எனும் கருப்பொருளில் தீவகத்தில் கலந்துரையாடல்!!

Discussion

“பசுக்களைப் பாதுகாப்போம்” எனும் கருப்பொருளிலான கலந்துரையாடலொன்று அண்மையில் தீவகத்தில் யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் திரு .மறவன்புலவு சச்சிதானந்தன் மற்றும் தீவக சிவில் சமூகம் ( islands civil society ) அமைப்பின் பொருளாளர் திரு. கருணாகரன் குணாளன் ஆகியோரின் ஏற்பாட்டில் தீவகம் தெற்கு ( வேலணை) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது . ஆக்கபூர்வமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலாளர் , கிராமசேவகர்கள் , வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், செல்லப்பா பார்த்தீபன், ஆ.கோபாலகிருஸ்ணன், ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் தா. ரெஜினா , தீவக சிவில் சமூக செயலாளரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான மாணிக்கவாசகர் இளம்பிறையன் மற்றும் முப்பதுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர் .

பண்ணைகளை அமைத்து பசுக்களை பாதுகாப்பதற்கு புலம்பெயர் ஒன்றியங்களும் ,பொது அமைப்புக்களும் , கோயில் நிர்வாகங்களும் முன்வரவேண்டுமென்று கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு ஏற்கனவே அதனை நடைமுறைப்படுத்திவருகின்ற அனலைதீவு புளியந்தீவு நாகேஸ்வர் ஆலய நிர்வாகத்தினருக்கும் மிகவிரைவில் பசுப்பண்ணை அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ள புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் நிர்வாகத்தினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது .

Related Articles

Leave a Reply

Back to top button