மரணத்தின் அனுபவம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இப்போது, அவுஸ்திரேலியாவில் ஒரு புதிய மெய்நிகர் செயன்முறை (virtual reality simulation) மக்களுக்கு மரணத்தின் போது ஏற்படும் அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது.
அவுஸ்திரேலியாவில் மெய்நிகர் செயன்முறை (virtual reality simulation) என்ற புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்ப்ட்டு உள்ளது. இதன் மூலம் மரணம் எப்படி இருக்கும் என்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது மேலும் மக்கள் மரணத்தின் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க உதவுகிறது.
ஷான் கிளாட்வெல் என்பவர் பொஸிங் எலக்ட்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் என்ற வேர்ச்சுவல் ரியாலிட்டி அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இறப்பு நெருங்கும் போது எப்படி இருக்கும் என்ற உணர்வை கொடுக்கிறது.
இதில் ஈடுபடுபவர்களுக்கு இதயத் துடிப்பு நிற்பது முதல் மூளை இறப்பு வரையிலான மரணத்தின் போது ஏற்படும் உணர்வை கொடுக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் இதயத் துடிப்பைச் சரிபார்க்க, நீங்கள் ஒரு தற்காலிக மருத்துவமனை படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும். வேர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்தைப் பெறும் நபர்கள் ஹார்ட் மொனிட்டருடன் இணைக்கப்படுவர் மேலும் அவர்கள் மிகவும் சங்கடமாக இருந்தால் எந்த நேரத்திலும் வெளியேறலாம். உங்கள் உதவிக்கு மருத்துவ ஊழியர்கள் இருப்பர்.
உடல்முழுவதும் கடந்து செல்லும் மின்சாரப் புயல் அனுபவம், உடலுக்குள்ளும் அதற்கு அப்பாலும் உள்ள பிரபஞ்சங்களைப் பற்றிய சிந்தனையைத் தருகிறது.
மெல்போர்னைச் சேர்ந்தவரும் கண்காட்சியாளருமான மார்கஸ் க்ரூக், வேர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்தில் மரண அனுபவம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறார்.
இதுகுறித்து டிக்டொக்கில் வெளியிடபட்ட வீடியோவில், “மரணம் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது, இதனை உணர்ந்த மக்கள் என்ன சொல்வார்கள் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.
அவர்கள் இதயத் துடிப்பு மொனிட்டரில் உங்கள் விரலை வைத்துவிட்டு, உங்கள் கையை உயர்த்தச் சொல்கிறார்கள். மரணம் நெருங்குவது குறித்த வேர்ச்சுவல் ரியாலிட்டி என்பது மரணத்திற்கு அருகில் செல்லும் அனுபவம் என கூறி உள்ளார்.