ஒமிக்ரொன் திரிபுடனான முதலாவது கொவிட் தொற்றாளர் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆபிரிக்க நாடொன்றில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த நபரும், அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களும் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொற்று உறுதியான குறித்த நபர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒமிக்ரொன் திரிபு கண்டறியப்பட்டதை அடுத்து, அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்துமாறு வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.