ஆன்மீகம்செய்திகள்

அகோரிகள் என்பவர்கள் யார்!!

Aghoris

அகோரிகள் அல்லது அகோரா சாதுகள் என்பவர்கள் கங்கை ஆற்றின் கரையில் வாழும் அசைவ சமய ஆன்மீகவாதிகள்.வட இந்தியாவின் வீதிகளிலும், கோவில்களிலும் அவர்களை அதிகளவில் பார்க்கலாம். அவர்கள் மக்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் அவர்களின் உலகமே தனிதான். அவர்களின் வாழ்க்கை முறை கடினமானதாகவும், மிகவும் கடுமையானதாகவும் இருக்கும்.

அகோரிகள் பெரும்பாலும் இறுதிச்சடங்குகள் நடக்கும் இடங்களில்தான் இருப்பார்கள். சிலர் மக்களிடம் இருந்து விலகி குகைகளிலோ, காடுகளிலோ, பாலைவனங்களிலோ வாழ்வார்கள். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிடுகின்றனர்.

இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்றபட்டவை. அதில் முக்கியமானது பிணங்களைச் சாப்பிடுவது. இவர்கள் ஒரு மாய ஆளுமை கொண்டவர்கள்.
அகோரிகள் பெரும்பாலும் மஹாகாலனான சிவபெருமானையும் அவரின் அழிக்கும் துணையான காளியையும்தான் வணங்குவார்கள்.

ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு விதத்தில் திருப்திப்படுத்தவேண்டும்.ஆனால் சிவன் மற்றும் காளியை திருப்திப்படுத்துவது என்பது அனைவராலும் முடியாது. அதனை அகோரிகளால் மட்டுமே செய்யமுடியும்.

இவர்கள் மனிதக்கழிவுகள், மனித சதைகளை உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மற்றவர்களை வெறுப்பவர்கள் தியானத்தில் ஈடுபட முடியாது என்பது அவர்களின் நம்பிக்கையாகும். பிணங்களை எரிக்கும் இடத்தில் அமர்ந்து ஒரே கிண்ணத்தில் விலங்குகளுடன் உணவு உண்பார்கள்.விலங்குகள் தங்கள் உணவை அசுத்தப்படுதுவதாக அவர்கள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். அவர்களின் ஒரே நோக்கம் ஈசனை அடைவது மட்டும்தான்.

அகோரிகளிடம் இருக்கும் மர்மமான மருந்துகள் உலகம் முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக இருக்கிறது. விஞ்ஞானத்தால் கூட குணப்படுத்த முடியாத நோய்களை அகோரிகளால் குணப்படுத்த முடியும். இதனை அவர்கள் மனித எண்ணெய் என்று கூறுகிறார்கள்.

மனித உடல்களை எரிக்கும் போது அதிலிருந்து எடுக்கப்படும் பொருட்களைக் கொண்டு இது தயாரிக்கப்படுகிறது.ஆனால் இந்த மருந்துகளை மருத்துவ நெறிமுறைகளை கருதி அவர்கள் சோதனை செய்ய அனுமதிப்பதில்லை.

அகோரிகளின் குணப்படுத்தும் சக்திகள் அவர்களின் தாந்திரீக சக்தியில் இருந்து கிடைக்கிறது. ஆனால் அவர்கள் இந்த சக்தியை எப்பொழுதும் தீயசெயல்களுக்காக பயன்படுத்துவதில்லை. தங்களை பார்க்க வருபவர்களின் உடலில் இருக்கும் நோய்களை தங்களுடைய சக்திகள் மூலம் ஈர்த்து குணப்படுத்த இவர்களால் முடியும்.

சில அகோரிகள் தாந்திரீக சக்திகளின் மூலம் சிவன் மற்றும் காளியை வழிபடும் போது தாங்கள் மேலும் சக்தியை பெறலாம் என்று நம்புகிறார்கள்

அகோரிகள் சிவபெருமானின் பக்தியில் மூழ்கிக்கிடப்பார்கள். . சிவன் சர்வவல்லமையுள்ளவர், முழுமையானவர் என்பதால் எல்லாவற்றிற்கும் பதில் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் சிவ சாதனா, ஷாவ் சாதனா, மற்றும் ஸ்மாஷான் சாதனா என்று அழைக்கப்படும் மூன்று வகை தவத்தை மேற்கொள்கிறார்கள். சிலர் தங்களை சிவபெருமானின் அவதாரங்கள் என்றும் நம்புகிறார்கள்.

அகோரிகள் சூனியம் செய்வதாக அறியப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் யாருக்கும் அல்லது எதற்கும் தீங்கு விளைவிப்பதில்லை, அது அவர்களை குணமாக்குகிறது என்றும் இறந்தவர்களுடன் பேச அவர்களின் அமானுஷ்ய சக்திகளை அதிகரிக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button