மன்னார் – அடம்பன் பிரதேசத்தில் வசிக்கும் இலக்கியப்படைப்பாளியும் முன்னாள் போராளியுமான பல்துறை ஆளுமை மிக்க ‘கம்பிகளின் மொழி பிறேம்’ என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் (வயது-42) என்ற குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
வீட்டின் முன்னால் நின்று அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வேளையிலேயே டிப்பர் வாகனம் ஒன்று இவரைத் தாக்கி விட்டுச் சென்றுள்ளது.
இவரது மரணத்தில் சந்தேகம் நிலவும் நிலையில், மேலதிக விசாரணைகளைப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
செய்தியாளர் – சமர்க்கனி