தரம் 1 க்குச் செல்லும் மாணவர் தொகையில் திடீர் சரிவு – கைதடி நுணாவில் அதிபர் சிவமலர் கவலை!!
Sports
நேற்றைய தினம் ( 08. 03 2023 ) இடம்பெற்ற் மட்டுவில் தெற்கு வளர்மதி முனபள்ளிச் சிறார்களின் விளையாட்டுத் திறனாய்வுப் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து சிறபித்து உரையாற்றும் போதே மேற்படி கருத்தை தெரிவித்தார் . அவர் மேலும் கூறுகையில்
எமது உறவுகள பலர் வெளிநாடுகளுக்குச் சென்றதன் விளைவும் எம்மில் ஏற்பட்ட ஆரோக்கிய குறைபாடுகளும் யாழ்ப்பாண பிறப்பு வீத்த்தை மிகவும் குறைப்பதாகவும் இதனால் முன்பள்ளிகளில் இருந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது எனவும் ஆதங்கப்பட்டார். ஏன் இந்த வளரமதி முன்பள்ளியில் இருந்தே 6 பேரே இவ்வாண்டு தரம் ஒன்றுக்குச் செல்லவுள்ளனர்.இது மாணவர்கள் எண்ணிக்கையில் தொடரத்தும் குறைவைக் கொண்டுவந்து பாடசாலைகளை மூடும் அளவுக்கு இந்த விடயம் பெரிதாக உள்ளது . இதனால் பெற்றோர்கள் பிள்ளைச்செல்வங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் குழந்தைகளுக்கு சரியான பழக்க வழக்கங்களை சிறு வயது தொடக்கம் பழக்க வேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்தார்.