யாழ். நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 4111வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
என யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத் தேர்தல் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் – யாழ் நிர்வாக மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
இந்த முறை தேர்தலில், யாழ் மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேச்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.
13 அரசியல் கட்சிகள் சார்பில் 135 வேட்பு மனுக்களும் 15 சுயேச்சை குழுக்கள் சார்பில் 15 வேட்பு மனுக்களும் சமர்ப்பிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன எனத் தெரிவித்தார்.
இந்த விகிதமானது மக்கள் மத்தியில் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.